மகர ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய அனுபவ அறிவு பரிமளிக்கும். ஒருவர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டபடி செய்வது தான் ரொம்ப நல்லது. பயணம் செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். பொருட்கள் மீதும் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படங்களில் கவனத்தை செலுத்துங்கள்.அதேபோல் கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும் கவலைப்படாதீர்கள். அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையை அனைத்து விஷயங்களும் சரியாகிவிடும். அதேபோல் எதிலும் நிதானமான போக்கைக் காணப்படும். இன்று பொறுமை என்பதே கண்டிப்பாக வேண்டும் எப்போதுமே இழந்துவிடாதீர்கள். காதலர்களுக்கு நாள் சிறப்பு மிக்க நாளாக இருக்கும் கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
மனைவியிடம் கேட்டு கணவன்மார்கள் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல எந்த ஒரு காரியத்தையும் கண்டிப்பாக பெரியோரிடம் ஆலோசனை செய்யுங்கள். திட்டமிட்டு செய்தால் எதையும் நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். முக்கியமானபணிகளுக்கு செல்லும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் நீல நிறம்.