மகர ராசி அன்பர்களே …! இன்று முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கக் கூடிய நாளாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கல்விக்கான செலவு அதிகரிக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதன் மூலம் நன்மையும் உண்டாகும். எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபம் ஆகவே நடந்தும் முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதனால் அதனால் உங்களுடைய கௌரவம் உயரும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் ஏற்படும். பண வரவு கூடும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு ஏற்படும்.
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவே இருக்கும். காதலர்களுக்கும் எந்த விதத்திலும் சிரமம் இல்லாமல் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீல மற்றும் சிவப்பு நிறம் .