மகர ராசி அன்பர்களே …! இன்று சிலரது பேச்சு உங்களை கொஞ்சம் சங்கடப்படுத்தும். பொது இடங்களில் தயவுசெய்து அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத் தான் இருக்கும். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். சுற்றுப்புற தொந்தரவினால் கொஞ்சம் தாமதமாகலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு இன்று செலவுகள் கூடும்.
கல்வி தொடர்பான செலவுகள் தான் அதிகமாக இருக்கும். கவனத்துடன் சில வேலைகளை செய்ய வேண்டும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்தாலும் கூடுமானவரை கடன் பிரச்சினைகள் ஏதும் சிக்கிக்கொள்ள வேண்டாம். அதாவது தொழிலுக்காக புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சு மூலம் வாடிக்கையாளரிடம் நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். காதலர்கள் இன்று பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும்.
பேச்சு உங்களுக்கு நிதானம் இருந்தால் மட்டுமே காதல் நிலைத்திருக்கும். கூடுமானவரை பேச்சு என்பது ரொம்ப முக்கியமானது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.