மகர ராசி அன்பர்களே …! துன்பங்கள் வாழ்வில் இருந்து விலகிச்செல்லும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவாதங்கள் தீர்வு வந்து சேரும். உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.
தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதை பற்றியும் கவலை பட்டுக் கொண்டிருக்காமல் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள்.
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்ய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: நீல மற்றும் மஞ்சள் நிறம்.