Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…காலதாமதம் ஏற்படும்…பதவி உயர்வு கிடைக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாளாக இன்றைய நாள் இருக்கும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது ரொம்ப நல்லது. காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அக்கம் பக்கம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். காதலர்கள் இன்று எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சுமூகமாகவே இருப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமை இருக்கக்கும். அனைத்து விதமான முயற்சிகளும் நல்ல பலனையே கொடுப்பதாக இருக்கும்.

மனைவி மீது அன்பாக இருப்பீர்கள். அதேபோல மனைவி மூலம் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |