Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பொறுமை தேவை …மங்களம் உண்டாகும்…!

 

மகர ராசி அன்பர்களே …! இன்று சந்தோஷம் ஓரளவு கிடைக்கும். மங்கையராய் சில பிரச்சினைகள் எழக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மனக்கலக்கம் கொஞ்சம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் ஓரளவு தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். தந்தை வழியில் தயவுசெய்து எந்தவித பிரச்சினையும் வேண்டாம். சில மாற்றங்கள் இருக்கும். இன்று குடும்பத்தில் அவ்வப்போது வாக்கு வாதங்களும் வந்துசெல்லும்.

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகவும், நிதானமாகவும் தான் செயல்பட வேண்டும். இன்று யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். தீவிரமாக சிந்தனை செய்து பின்னர் காரியங்களில் எதிர்கொள்ளுங்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள் போதும்.கோபம் அவ்வப்போது தலைதூக்கும் நண்பர்கள் வகையிலும் உறவினர் வகையிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது ரொம்ப நல்லது.

எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக் கொள்வது சிறப்பு. முயற்சிகள் இப்போதைக்கு ஏதும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஓரளவு மாற்றங்கள் நிகழும் .

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை.

Categories

Tech |