மகர ராசி அன்பர்களே …! இன்று சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தேவைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். இன்று எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலனைப் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும்.
ஆனால் உங்களுக்கு எதிராக செயல்படும் சூழல் இருப்பதால் கவனமாக இருங்கள். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுய சிந்தனையில் அக்கறை கொள்வீர்கள். எதிலும் கவனமாக இருங்கள். சிறப்பான நாளாக இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் என்பது அவசியம். தயவு செய்து கோபமாக பேசி விடாதீர்கள். எதையும் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளவேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக நிதானமாக இருங்கள்.
காதலர்கள் கண்டிப்பாக பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நீலம்.