மகர ராசி அன்பர்களே …! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள் ஆகியிருக்கும். அளவுடன் கூடிய ஆதாயமும் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பெரியவரிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். அடுத்தவர்களை அனுசரித்து காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நன்மையை கொடுக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். விலகிச்செல்லும் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அவர்களைப் பற்றிய குறைகள் சொல்ல வேண்டாம். இன்று காதலர்கள் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள்.
உங்களுடைய காதல் கைக்கூடி முன்னேற்றத்தைக் கொடுக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் எளிமையாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.