மகர ராசி அன்பர்களே …! இன்று முக்கிய செயலில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரம் சுமாராக அளவில் இருக்கும். இதமான அணுகுமுறையால் நிலுவைப்பணம் வசூலாகும். சுற்றுப்புற சூழ்நிலையின் தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதப்படலாம். ஆகையால் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது.
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் கொஞ்சம் உண்டாகும்.பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. திடீர் செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு பேச்சைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல் அக்கம்பக்கத்து இடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.
காதலர்கள் எந்தவித வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஸ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்.