மகர ராசி அன்பர்களே …! இன்று துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். துடிப்புடன் செயல்படுவீர்கள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை காக்கப்படும். பல வழிகளிலும் தக்க சன்மானம் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.
பணி நிமிர்த்தமாக பயணம் செய்ய வேண்டி வரலாம். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகின்ற மிக சிறப்பான நாளாக இருக்கும். புதிதாக காதல் வயப்பட்ட கூடிய சூழல் இருக்கும்.
காதலுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்.