மகர ராசி அன்பர்களே …!! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுங்கள்.கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். உறவினர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படும். எல்லா வகையிலும் இன்று ஓரளவு தான் நன்மை ஏற்படும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதால் மனம் ஏமாற்றமடையும். உங்களுக்கு சரியான நேரத்தில் மற்றவர்கள் உதவி செய்யமாட்டார்கள், இதனால் மனசங்கட்டம் ஏற்படும்.தேவையில்லாத கவலையும்அடைவீர்கள்.பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது மட்டும் ஆறுதலைக் கொடுக்கும்.
நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய விஷயங்கள் ஓரளவுதான் நடக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான விஷயமாக இருந்தால் மனைவியிடம் கேட்டு பின்னர் செய்வது ரொம்ப நல்லது.விருந்தினர் வருகை இருக்கும்,அதனால் செலவுகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷம் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்