மகரம் ராசி அன்பர்களே….!! இன்று விஐபிகளின் சந்திப்பால் நினைத்த காரியம் நல்லப்படியாக நடக்கும் நாளாகவே அமையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும் .மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குறைந்த சேமிப்பை ஈடு கட்டுவீர்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. முக்கியமான காரியத்தில் ஈடுபடும் போது வீன் அலைச்சல் , தடங்கல், தாமதம் போன்றவை இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்யுங்கள். இன்று மனக்கவலை அவ்வப்போது இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக தயவு செய்து மன கவலைப்பட வேண்டாம். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் தீரும். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேவையில்லாத பொருட்கள் மீது கண்டிப்பாக முதலீடுகள் செய்ய வேண்டாம். பொறுமை காத்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். நெருப்பு மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் யாரிடம் பேசினாலும் கோபத்தை மட்டும் வெளிக் காட்டாதீர்கள். வாக்குவாதத்தில் கண்டிப்பாக ஈடுபடாதீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு உணவாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மை நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்