மகரம் ராசி அன்பர்கள்…!! இன்று எந்த ஒரு செயலையும் நீங்கள் சாமர்த்தியமாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். இன்று ரகசியத்தை பாதுகாப்பது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக தான் இருக்கும். செலவில் சிக்கனம் வேண்டும். நீண்ட தூர பயணங்களில் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். இன்று கோபம் கொஞ்சம் தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது.
வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படுவதற்கான வாய்ப்புக்களும் இன்று நல்லபடியாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று உறவினர்களின் வருகை இருக்கும் அதன் மூலம் உங்களுக்கு செலவு இருக்கும். கூடுமானவரை செலவை மட்டும் நீங்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த ஒரு நல்ல வாய்ப்பையும் பயன்படுத்துவது ரொம்ப நல்லது. கூடுமானவரை எதிலும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்