மகரம் ராசி அன்பர்களே, இன்று குடும்ப முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும், கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். இல்லத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல் கூடுதல் செலவை சந்திக்கக்கூடும். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பலி ஏற்க வேண்டி இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். உறவினர்களுடன் பேசும் பொழுதும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் பொழுதும், நிதானமாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று வாக்குவாதத்தை நீங்கள் தவிர்த்து விட்டால் அனைதிலும் முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே வீண் மன வருத்தம் போன்றவை ஏற்பட்டு நீங்கும்.
அக்கம்பக்கத்தினர் இடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள், இன்று பொறுமையை கையாளுங்கள், முடிந்தால் தானம் செய்யுங்கள், ஆலயம் சென்று வாருங்கள், மனதை ஆலயம் சென்று வருவதில் ஈடுபடுத்துவது ரொம்ப நல்லது,]. இன்று மாணவர்களுக்கு கல்வியில் தடை இருக்கும், கடினமாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும் .
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை மஞ்சள் நிறம்