மகரம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளால் பணம் கொடுப்பதை தவிர்க்க முடியாததாக இருக்கும். நேர் வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். சிக்கனத்தை குறைத்தால் சிக்கல்கள் தீரும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும், கவலை வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள், சரியான உணவை தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, ஆரஞ்சு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்