மகரம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகளிடம் இருந்து விடுபடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். மகத்துவம் காண இறைவனை தேடி செல்ல வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். இன்று குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே பல விஷயங்களால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும். வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
தொலைபேசியில் பேசிக்கொண்டு எல்லாம் வாகனத்தில் செல்ல வேண்டாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கல்வி சிறப்பாகவே இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்ணமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்