மகரம் ராசி அன்பர்களே, இன்று காரியங்களை திட்டமிட்டு செய்வீர்கள். இன்று சொந்த பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர், உறவினர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல வேண்டாம். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணவரவை விட செலவு தான் இன்று கூடும். வெளியூர் பயணங்களில் திடீர் மாற்றம் செய்யக் கூடும். இன்று தெளிவான முடிவுகள் எடுப்பது மூலம் பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும்.
அரசாங்கம் தொடர்பான விசயங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று மரியாதையும், அந்தஸ்தும் உயரும். இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். சரியான நபரைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்றார்போல் பொறுப்பை ஒப்படையுங்கள். மிகச்சிறப்பாக பெறும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பாகவே நடைபெறும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீலம் நிறம்