Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூறாதீர்கள்.. வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே,  இன்று திட்டமிட்ட பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். எந்தவித ரகசியத்தையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று  கூடுதல் வருமானத்தால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

இன்று  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இட இருப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

கவனமாக பேசுவது நல்லது. இன்று  தாய்மாமன் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இன்று குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களை மற்றும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று  மாணவச் செல்வங்கள் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள்.

கவனமுடன் படியுங்கள், இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான  திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |