மகரம் ராசி அன்பர்களே, இன்று தேக நிலை மாறி தெளிவு பிறக்கும், நாளாகத்தான் இருக்கும். நேற்று செய்ய மறந்த பணியை இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் உதவியால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று அடுத்தவர் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது மட்டும் நல்லது.
ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். வீண் அலைச்சலும், செலவும் கொஞ்சம் இருக்கும், கவனம் இருக்கட்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணம் சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் புதிய அனுபவத்தை இன்று நீங்கள் பெற்றிடுவீர்கள். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உன்னதமான நாளாகவே அமையும். கவலை வேண்டாம்.
இன்று மாணவ செல்வங்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள், கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கல்வி காண முயற்சியும், வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் நீலம்