மகரம் ராசி அன்பர்களே, இன்று நல்லவர்களின் நட்பால் நலம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் பொழுது அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுதும் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.
வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சிநிகழ கூடும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகத்தான் நீங்கள் நடந்துகொள்ளவேண்டும். மிக முக்கியமாக சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.
இன்று மாணவச் செல்வங்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். விளையாட்டை ஏரங்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் தயிர் சாதத்தை ஏழு நபர்களுக்கு அன்னதானம் கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்
அதிர்ஷ்டமான திசை: வடக்கு