மகரம் ராசி அன்பர்களே.! நிதி நிலைமை கட்டுக்குள் இருக்கும்.
இன்று பல வழிகளில் உங்களுக்கு பண வருமானம் வந்து சேரும். நல்ல நண்பர்களின் சந்திப்பு இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். அவ்வப்போது வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் சரியாகிவிடும். காரிய தாமதம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதல் பொறுப்புகளை தரும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் எதுவும் இருக்காது. மனம் அமைதி நிலையை அடையும். கண்டிப்பாக உயர்ந்த எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் கூட உங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன் இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நிதி நிலைமை கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
மனதை நிம்மதியாக வைத்துக்கொள்ள வேண்டும். எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய செயலில் வேகம் இருக்கும். காதல் பிரச்சினையை ஏற்படுத்தாது. மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க வைக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தித் தரும். மாணவர்களுக்கு தொட்டது துலங்கும். மாணவர்கள் எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். கல்விக்காக முயன்று வெற்றி பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்