மகரம் ராசி அன்பர்களே.! இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடும்.
இன்றைய நாள் காலை நேரத்திலேயே உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாக இருக்கும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து இணையும். தொல்லை கொடுத்தவர்கள் கண்டிப்பாக காணாமல் போகக்கூடும். கவலைப்பட வேண்டாம். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதத்தில் நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இருக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தால் ஆதாயம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி இருக்கும். தடையின்றி உங்களுடைய வாழ்க்கை நடக்கும். எளிதாக உங்களுடைய வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். உடல் நிலையில் சில பாதிப்புகள் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தெய்வீக நம்பிக்கை கூடும். எந்த காரியத்திலும் எளிதாக உங்களால் ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பெண்களுக்கு சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சிக்கலான பிரச்சனைகளை தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடும்.
அன்பும் நிலையாக இருக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் சிறப்பாக இருப்பீர்கள். மணவாழ்க்கை அமையும் நாளாக இருக்கும். திருமண தடைகள் விலகி செல்லும். சுறுசுறுப்பாக இயங்க முடியும். சுகமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் இருக்காது. காதல் கண்டிப்பாக கை கூடும். காதல் வெற்றி ஏற்படுத்தித்தரும். மாணவர்கள் எதையும் யோசித்து செய்ய வேண்டும். முடிவுகளில் தெளிவாக இருக்க வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் பச்சை