மகரம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கை தேவை.
இன்று காலை நேரத்திலேயே வந்து சேரக்கூடிய நாளாக இருக்கும். விட்டுப்போன உறவுகள் கூட மீண்டும் வந்து இணையும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வப்போது மனக் குழப்பங்கள் ஏற்படும். திருமண பேச்சுக்களைத் தள்ளிப் போட வேண்டும். நிதானமான அணுகுமுறை இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தேவையில்லாத பஞ்சாயத்துகளில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அதிகமான பணிச்சுமை இருக்கும்.
பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பயணங்கள் செல்வதாக போட்ட திட்டங்களை தடை செய்துவிட வேண்டும். காதலில் சின்ன சின்ன பிரச்சினைகள் எழக்கூடும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். மாணவர்களுக்கு இன்று சிந்தனை திறன் அதிகரிக்கும். கல்வி பற்றி அக்கறையுடன் மாணவர்கள் ஈடுபடுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை