Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! உற்சாகமாக இருப்பீர்கள்….! பிரச்சனைகள் விலகும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சிறு செயலையும் உங்களால் நேர்த்தியுடன் செய்ய முடியும்.

இன்று பணம் வந்து குமியும். ஏனென்றால் கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக விலகி விடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். சிறு செயலையும் உங்களால் நேர்த்தியுடன் செய்ய முடியும். தொழில் புதிய முயற்சிகளை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். வெற்றி பெறுவதற்கு எளிதாக உங்களுடைய வாழ்க்கை அமையக்கூடும். வியாபாரம் இன்று வியப்பூட்டும் வகையில் இருக்கும். நிலுவைப் பணம் வந்து சேரும். விலகிய உறவினர்கள் சொந்த பாராட்டுவார்கள். கடன் தொல்லை தலை தூக்கலாம். அதனைப்பற்றி வருத்தப்பட வேண்டாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இடமாற்றம் போன்றவை இருக்கத்தான் செய்யும். அதனை நீங்கள்தான் உடைத்தெறிந்து சரி செய்து கொள்ள வேண்டும்.

வாகனத்தில் சென்று வரும்போது பொறுமை வேண்டும். மற்றவர் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். காதலின் முன்னேற்றகரமான சூழல் இருக்கின்றது. காதலில் மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் இருக்கின்றது. மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்யமுடியும். கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். மாணவர்கள் தைரியமாக எந்த ஒரு விஷயத்தையும் அணுகலாம். எதற்காகவும் நீங்கள் பயப்பட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |