மகரம் ராசி அன்பர்களே.! பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாம்.
இன்று தன் தொழிலில் தன்னம்பிக்கையும் மனதில் மகிழ்ச்சியும் கூடும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மற்றவருடன் வாக்குவாதங்களை தவிர்த்து பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது கஷ்டம். உங்களுடைய எதிர்பாராத பேச்சு சிலருக்கு மன வருத்தத்தை கொடுக்கும். எதார்த்தமான பேச்சு கூட மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடும். மற்றவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நன்மை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய பணம் தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இருந்தாலும் அதனை சமாளித்து விடுவீர்கள்.
கஷ்டங்கள் இருந்தாலும் அதனையும் சரி செய்து கொள்வீர்கள். பெண்கள் எதையும் உற்சாகமாக செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் படிப்படியாக குறையும். அதில் உள்ள சிரமங்கள் குறையும். முன்னேற்றங்கள் ஏற்படும். திருமணத் தடைகள் கூட இப்பொழுது விலகிவிடும். கைகொடுக்கும் மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வியில் அக்கறை ஏற்படும். விளையாட்டுத் துறையிலும் அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்