Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்….! பேச்சில் கவனம் தேவை….!!

மகரம் ராசி அன்பர்களே.! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.

இன்று வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்யமுடியும். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததை சாதிக்க முடியும். இன்று சந்திராஷ்டம தினம் என்பதால் பேச்சை கவனித்து பேசவேண்டும். மனக் குழப்பங்கள் இருக்கும். தாமதம் ஏற்படுத்தக்கூடிய பணிகளில் கவனம் வேண்டும். தொழில் அபிவிருத்திக்கான பணவரவு கிடைக்கும். அதற்கு உங்களுடைய உழைப்பு காரணமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் சரியாகி அன்பு பிறக்கும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். பிள்ளைகளுடைய கல்விக்காகச் செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.

வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பண பொறுப்புகளை ஏற்க வேண்டாம். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். காதல் ஓரளவு கைகூடும். காதலில் சிரமங்களை பார்க்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இன்று துணிச்சல் கூடும். கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:    5 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை

Categories

Tech |