மகரம் ராசி அன்பர்களே.! யாருக்கும் பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாம்.
இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த விஷயத்தை பற்றியும் பேச வேண்டாம். உங்களுடைய ரகசியத்தை பற்றியும் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். உழைப்பை அதிகப்படுத்தி வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். பண வரவு சீராக இருக்கும். உழைப்பு அதிகமாக இருக்கும். பயணங்களால் வீண் செலவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். நண்பர்களை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். தொழிலில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். எதையும் கவனமாகச் செய்தால் வெற்றி நிச்சயம். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
\தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாம். காதலில் எதையும் திட்டமிட்டு செய்தால் மட்டுமே வெற்றி இருக்கும். வார்த்தைகளில் எப்பொழுதும் போல தெளிவு தேவை. மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இருக்கும். ஆனால் படிப்பதற்கான சூழல் குறைவாக உள்ளது. மேற்கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை