மகரம் ராசி அன்பர்களே.! சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியும்.
இன்று நீங்கள் கடுமையாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது அதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் இருக்கும். பயணத்தில் சில தடைகளும் இருக்கும். அதனை நீங்கள் தான் சரிசெய்து கொள்ளவேண்டும். தாமதமாக தான் ஒரு சில காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் பணவரவும் குறைவில்லாமல் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய திட்டங்கள் கண்டிப்பாக நல்ல விதத்தில் நடக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியும். செல்வாக்கை உயர்த்துவீர்கள். பூர்வீக சொத்துக்களில் உள்ள வில்லங்கங்கள் சரியாகும்.
சொத்துப் பிரச்சினைகளில் உள்ள வில்லங்கங்கள் சரியாகும். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொடுப்பீர்கள். பேச்சில் இனிமை காட்டுவீர்கள். காதல் சிரமத்தை கொடுக்கும். பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காதல் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். கல்வியில் எதையும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை