மகரம் ராசி அன்பர்களே.! திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள்.
இன்றைய நாள் நட்பால் நன்மை ஏற்படும். நாட்பட்ட பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை கொடுக்கும். ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணையக் கூடும். எதிர்பாராத செலவுகள் இருக்கும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். திட்டமிட்டு செயல்படுவது ரொம்ப நல்லது. உறவுகளுடன் தேவையற்ற வாக்குவாதம் ஈடுபடலாம். பார்த்து பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கடுமையான உழைப்பு இருப்பதினால் பண வரவு தாரளமாக இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் உணர்ச்சிகரமாக பேசுவீர்கள். திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள்.
பெண்களுக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அக்கம்பக்கத்தினர் உடன் உரையாட வேண்டும். காதலில் சின்ன சின்ன விஷயத்திற்கு பிரச்சனைகள் ஏற்படும். காதலினுடைய நிலைபாடுகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். கொஞ்சம் பார்த்து பக்குவமாகப் பேச வேண்டும். மாணவர்களுக்கு செயலில் வேகம் இருக்கும். கல்வியில் அக்கறை ஏற்படும். கல்வியில் இருந்த தடைகளும் கண்டிப்பாக விலகிச்செல்லும். எல்லாவிதமான நல்லதும் நடக்கும். மாணவர்கள் தைரியமாக இருக்கலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெள்ளை