Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! மனவருத்தங்கள் நீங்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று சிலர் சொல்லும் அறிவுரைகள் உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை மட்டுமே செய்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அக்கம்பக்கத்தினரிடம் உரையாடவேண்டும். வரவை விட செலவு கூடுதலாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மெதுவாக செல்ல வேண்டும். உறவினர்கள் நண்பர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கிவிடும். எதிர்பார்த்த ஆர்டர்களில் தாமதம் ஏற்படும். அதை நினைத்து மன வருத்தம் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது அதனை மட்டுமே செய்ய வேண்டும். மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் இருக்கும். ஆனால் அது தானாக விலகி செல்லும். முன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு முடிவுகள் தெளிவு இருக்கும். கல்வியில் ஆச்சரியப்பட கூடிய வகையில் செயல்கள் இருக்கும். காதல் சிரமத்தை கொடுக்காது.. காதல் கண்டிப்பாக திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 9                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்:  நீலம் மற்றும் பிரவுன்

Categories

Tech |