Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மன அழுத்தம் சரியாகும்….! நிர்வாகத்திறமை வெளிப்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! இல்லத்தில் பணி சுமை இருந்தாலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

ஏற்கனவே செய்த நல்ல செயலுக்கான பாராட்டுகள் இப்போது வந்துசேரும். மனம் உற்சாகமாக காணப்படும். எதிலும் தீர ஆலோசனை செய்து எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுத்தி பயன்படுத்துவீர்கள். அளவான பணவரவு இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். ஒவ்வாத உணவு வகையை எடுத்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பணவரவு தாமதமாகத்தான் கிடைக்கும். கடன் ஓரளவு அடைபடும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். நீண்ட நாட்களாக இருந்த மனவருத்தங்கள் நீங்கிவிடும். மன அழுத்தமும் சரியாகிவிடும்.

பெண்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். இல்லத்தில் பணி சுமை இருந்தாலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நிதி நிலைமை சரியாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். காதல் கைகூடும். காதலில் உள்ள சிரமங்களும் தீர்ந்துவிடும். காதலுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் இறுதியில் மன சந்தோசத்தை தரும். கவலைப்பட வேண்டாம். மாணவர்களுக்கு தொட்டது துலங்கும். மாணவர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீலம்

Categories

Tech |