மகரம் ராசி அன்பர்களே.! எதையும் பெரிதுபடுத்த வேண்டாம்.
இன்றைய நாள் மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதில் குறிக்கோளாக இருப்பார்கள். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடக்க வேண்டும். பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு மன அழுத்தங்கள் உண்டாகலாம். திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை பெரிது படுத்த வேண்டாம்.
சுமுகமாக கையாள வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டுக் கொள்ள முடியும். காதல் பிரச்சனையை ஏற்படுத்தாது. நிம்மதியை கொடுக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாள். கல்வியில் சாதிக்கக்கூடிய நாள். கல்வியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெளிர் பச்சை