மகரம் ராசி அன்பர்களே.! சூழ்நிலைகளைப் பொறுத்து தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இன்று விரயங்கள் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். கொள்கை துடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டாமல் எந்தவொரு பணியிலும் ஈடுபட வேண்டும். தயவு செய்து பிடிவாத குணத்தை மாற்ற வேண்டும். சூழ்நிலைகளைப் பொறுத்து தான் முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு காரியம் நடத்தி விட வேண்டுமென்று ரொம்ப ரொம்ப ஆர்வமாக செயல்படுவீர்கள். ஆனால் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை இருக்கும். எதிர்பாராத செலவுகள் இருக்கும். அதனை நீங்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். பணம் கையில் புரளும். வியாபார பொறுப்புகள் கூடும். மற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். கண்டிப்பாக முன்னேற்றத்தை பெற முடியும். திட்டமிடாத செய்யும் காரியங்கள் கூட வெற்றியடையும். மாணவர்களுக்கு எதையும் திறம்பட செய்ய கூடிய ஆற்றல் இருக்கும். எதையும் யோசித்து செய்ய வேண்டும். காதலில் உள்ள நிலைபாடுகள் கசப்பை தரும். இந்த காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். காதலில் பொறுமையைக் கடைப்பிடித்தால் மிகவும் நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு