மகரம் ராசி அன்பர்களே.! எல்லாவிதமான நன்மையும் உங்களைத் தேடி வரும்.
இன்று அரசு வழியில் புதிய வேலைவாய்ப்பு கல்வி வளர்ச்சி என பல அனுகூலமான பலனை எதிர்பார்க்க முடியும். நல்ல மாற்றங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க கூடிய உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அரசின் ஆதரவு நிலைபாடுகள் உங்களுடைய எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். எல்லாவிதமான நன்மையும் ஏற்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும். உங்களை மற்றவர்கள் அனுசரித்து செல்ல கூடும். வீண் வம்பு வழக்கு செல்லாமல் இருக்க வேண்டும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவிதமான நன்மையும் உங்களைத் தேடி வரும். தைரியமாக சில முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக வழிநடத்தி செல்ல வேண்டும்.
திருமண தடைகள் விலகி செல்லும். திருமணத்திற்காக வரன்கள் வந்தால் சீக்கிரமாக முடிந்து விடும். பெண்கள் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். பெண்களுக்கு இன்று திருமண தடைகள் விலகி முன்னேற்றமான பாதை கிடைக்கும். காதல் விவகாரங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். காதலில் மகிழ்ச்சி இருக்கும். காதல் கண்டிப்பாக திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். கல்வியில் கண்டிப்பாக முன்னேறிச் செல்ல முடியும். மாணவர்கள் பொறுப்பாக இருந்து எதையும் செய்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை