மகரம் ராசி அன்பர்களே.! இனிமையான பேச்சின் மூலம் காரியத்தை சாதிக்க முடியும்.
இன்று நண்பரின் செயலில் நீங்கள் குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். வீட்டில் இருப்பவர்களிடம் அன்பாக பேச வேண்டும். அவர்கள் ஏதேனும் ஒரு தவறு செய்திருந்தால் அதனை மன்னித்து விடவேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுபடுத்த வேண்டாம். மன அமைதி நீங்கள் கெடுத்து கொள்ள வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபங்கள் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கிவிடும். இல்லத்தில் மழலை செல்வம் கேட்கக் கூடிய சூழல் இருக்கின்றது. இனிமையான பேச்சின் மூலம் காரியத்தை சாதிக்க முடியும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருக்கும்.
பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் இருக்கும். முன்கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். நேர்மையான எண்ணங்களினால் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். கொஞ்சம் விட்டுகொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். காதல் முன்னேற்றத்தை கொடுக்கும். காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். மாணவர்கள் தெளிவாக எதையும் சிந்தித்து செய்தால் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு