மகரம் ராசி அன்பர்களே.! வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இன்று பணத்தட்டுப்பாடு அகலும் நாளாக இருக்கும். நீங்கள் பார்க்க நினைக்கும் நபர் கண்டிப்பாக உங்கள் முன் வந்து நிற்பார்கள். அலைபேசி வாயிலாக நல்ல செய்திகள் வந்து சேரும். திட்டங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும். திடீர் தனலாபம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். குடும்ப விவகாரங்களை சாமர்த்தியமாக கையாள வேண்டும். தேவையான விஷயங்களை மட்டும் கையாள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் மன வருத்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். சாமர்த்தியம் இருக்கும். சாதுர்யமாக வெற்றிக்கொள்ள முடியும். எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். சவால்கள் தீர்ந்து முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேச வேண்டும். வாகன வசதி வாய்ப்புகள் ஏற்படும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.
ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டதூர தகவல்கள் நல்லபடியாக வந்து சேரும். பெண்கள் அவசரப்படாமல் சூழ்நிலையை புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். காதல் சில நேரங்களில் முன் கோபத்துடன் ஆரம்பிக்கும். முன் கோபம் ஏற்பட்டால் கொஞ்சம் பின்வாங்கி விட வேண்டும். காதலினுடைய சூழல்கள் கொஞ்சம் குழப்பத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு சிந்தனைத் திறனை அதிகரிக்கும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். யோசித்து எதையும் பேச வேண்டும். பொறுப்பாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு