Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மாற்றங்கள் உண்டாகும்….! நிர்வாகத்திறமை பளிச்சிடும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு சுய சிந்தனை அதிகரிக்கும்.

இன்று எண்ணற்ற மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும். உங்களுடைய திறமையால் பிறரால் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய திறமைகள் மூலம் முன்னேறி செல்வீர்கள். உத்யோகத்தில் உயர்ந்த சூழல் உருவாகும். புதிய நண்பர்களின் வழிகாட்டுதலால் அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும். இன்று உடன்பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை பலப்படும். அறிவு திறமை இருக்கும். புத்தி கூர்மை இருக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். மனமும் இன்று அமைதி நிலையை அடையக் கூடும். எதிலும் உங்களுக்கு நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் உண்டாகும். அதனை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். அடுத்தவர் கூறுவதை தவறாகப் புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொறுமையாக இருந்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுக்க வேண்டும். அது சிறப்பை ஏற்படுத்தும்.

மேலதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய உறவுகள் அமையக்கூடும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணத்தை நீங்கள் கவனமாக கையாள வேண்டும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். பெண்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு சுய சிந்தனை அதிகரிக்கும். இன்று புரிதல் பலப்படும். காதலை சிறப்பான முறையில் வழி நடத்துவீர்கள். சீக்கிரமாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு எதையும் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும். புத்தி கூர்மை, திறமை வெளிப்படும். மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Categories

Tech |