மகரம் ராசி அன்பர்களே.! மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று பார்ப்பதற்கு நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். உதவி என்று வந்தவருக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். உங்களால் என்ன முடியும் அதனை செய்து கொடுப்பீர்கள். தனவரவு அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணையக் கூடும். எல்லாவற்றிலும் மகிழ்ச்சி இருக்கும். ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதால் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வெள்ளந்தி போல இருக்க வேண்டாம். மனதிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வீண் வாக்குவாதங்கள் பகை போன்றவை ஏற்படக்கூடும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். செலவுக்கு ஏற்ற வரவு இருக்கும். மாணவர்களுக்கு தைரியம் கூடும்.
மாணவர்கள் கல்விக்காக நேரம் ஒதுக்குவீர்கள். கல்விக்காக செலவும் இருக்கும். பார்த்து பக்குவமாக எதையும் செய்ய வேண்டும். காதலில் சில நேரங்களில் கோபம் வெளிப்படும். கோபம் பிரச்சனையாக அமையும். விட்டு பிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்