மகரம் ராசி அன்பர்களே.! நிதானம் வேண்டும்.
தாயின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். வாகனத்தில் சென்று வரும்போது பொறுமை வேண்டும். துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். வியாபாரம் செழித்து வளரும். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் நல்லது கெட்டது சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும். நிதனத்தை கடைபிடிப்பது நல்லது. வரவேண்டிய பணம் தாமதமாக வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றது. பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்திலுள்ளவர்களிடம் எச்சரிக்கையாக பேச வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அன்பை வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்