மகரம் ராசி அன்பர்களே.! எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி என்பது நிச்சயம்.
இன்று வாய்ப்புகள் வாயில் தேடி வரும். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமை இருக்கும். குடும்ப தேவைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மீது நம்பிக்கை இருக்கும். ஆனால் சில நேரங்களில் மன வருத்தம் இருக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யக்கூடிய சூழல் இருக்கும். அதிகப்படியான வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை கவனிக்க வேண்டும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இருக்கும். கண்டிப்பாக வளமான வாழ்க்கை அமையும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி என்பது கண்டிப்பாக நிச்சயம். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதத்தில் நடந்து முடியும். குடும்பத்தில் திருமணம் நடப்பதற்கான சூழல் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முயற்சிகளில் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
தொழில் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சிக்கல்கள் தீர்ந்துவிடும். பிரச்சனைகள் படிப்படியாக குறைந்துவிடும். எந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களை விட்டுக் கொடுத்து சென்றால் நன்மை என்பது உங்களை தேடி வரும். இன்று காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். காதல் கைக்கூடும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். அழிவைத் தடுக்க புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்