Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பிரச்சனைகள் தீரும்….! சிந்தனை மேலோங்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு மனதில் நிம்மதி இருக்கும்.

இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். தேவைகள் எல்லாம் கண்டிப்பாக பூர்த்தியாகிவிடும். நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவை கொடுக்கும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று செலவுகள் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சிலருக்கு இடமாற்றம் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவிகள் செய்வார்கள். யாரையும் நம்ப வேண்டாம். கவனமாக செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையிலிருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தக்க சமயத்தில் எல்லாவிதமான பிரச்சனைகளும் தீரும். நட்பு ரீதியாக சில பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த திருமண தடைகள் விலகி செல்லும். பெண்களுக்கு மனதில் நிம்மதி இருக்கும்.

பெண்களுக்கு ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாக கூடும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். குடும்ப பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு மன நிம்மதி ஏற்படும். காதலை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்களுக்கு எதையும் சிறப்பாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. புத்திக்கூர்மை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |