மகரம் ராசி அன்பர்களே.! நிதானம் தேவை.
இன்று உணர்ச்சிவசப்பட்ட அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். நிதானமான அணுகுமுறையை வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைத்திலும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வீண் விவாதங்கள் தோன்றும். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டாம். அவசர முடிவுகளைத் தவிர்க்கவேண்டும். காதல் கை கூடும். காதலில் சிரமங்கள் இருக்காது. காதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி திருமணத்தில் போய் முடியக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு நினைத்தது நடக்கும். கல்வி சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்