Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மன வருத்தம் இருக்கும்….! வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! காரியத்தில் சின்னதாக தடை தாமதம் இருக்கும். 

இன்று உங்களுடைய செயல் நிறைவேறுவதற்கு காலதாமதம் பிடிக்கும். சில பணி உங்களுக்கு கடுமையான உழைப்பை ஏற்படுத்திவிடும். அதனால் உடல் சோர்வு கூடிவிடும். உத்யோகத்தில் கூட அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். நிலைமையை புரிந்து கொண்டுதான் முடிவுகள் எடுக்க வேண்டும். தடபுடலாக எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். முடிவுகளை சரியான முறையில் யோசித்து பார்த்து எடுக்க வேண்டும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணிபுரிவது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை, பணம் போன்றவற்றை இரவல் கொடுக்க வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். காரியத்தில் சின்னதாக தடை தாமதம் இருக்கும். சில நேரத்தில் மன வருத்தம் இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கம்மியாக இருக்கும்.

சமூக அக்கறையுடன் தான் இன்றைக்கு உங்களுடைய பணி இருக்கும்.  குடும்பத்தாரிடம் அன்பை நிலைநாட்ட வேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் இடர்பாடுகள் இருக்கும். வார்த்தைகளை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்து செல்வது ஓரளவு நன்மையை கொடுக்கும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீலம்

Categories

Tech |