மகரம் ராசி அன்பர்களே.! மனதில் அமைதி நிலவும்.
இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். போட்டியில் வெற்றி பெற அனுகூலம் ஏற்பட்டுவிடும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபங்கள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத வீண் செலவுகள் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டு சாதாரணமாக பேசுங்கள். குடும்பத்தை பொறுத்தவரை மனைவியுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகிவிடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகிவிடும்.
இல்லத்தில் மழலைச் செல்வம் வரக்கூடிய அம்சம் இருக்கின்றது. காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாள். பிரச்சனை ஏற்படுத்தாது. ஏற்கனவே பிரச்சனைகளில் இருக்கும் காதல் கூட இப்பொழுது நல்ல முடிவை தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்யுங்கள் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் கருநீலம்