Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! சிந்தனை ஓங்கும்….! பொறுமை தேவை….!!

மகரம் ராசி அன்பர்களே.! கவனம் தேவை.

இன்று புது விதமான சிந்தனைகள் ஓங்கும். தொழிலை விரிவுபடுத்தலாம், வேறு இடத்திற்கு மாற்றலாமா என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். வியாபாரத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்ல முடியும். அனுபவ அறிவு அதிகமாக இருப்பதால் எதையும் செய்வீர்கள். அளவான பணவரவு இருக்கும். பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்கள் நடத்தவேண்டும். உறவினர்களிடம் கவனமாக பேச வேண்டும். குடும்ப பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். எதையும் ஆராய்ந்து பார்த்து அதன் பின் செயல்பட வேண்டும். கடன் வாங்கி எதையும் செய்ய வேண்டாம். சொத்துக்களை வாங்கும்போது பத்திரங்களை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடவேண்டும்.

புதிய ஒப்பந்தங்களை சரியான முறையில் படித்து விட்டு எதையும் செய்ய வேண்டும். பயணங்களின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் எச்சரிக்கை வேண்டும். பொறுமையாக சென்று வருவது எப்பொழுதும் நல்லது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதலில் உள்ள சிரமங்கள் தீர்ந்துவிடும். காதல் பிரச்சனையை ஏற்படுத்தும். நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மேற் கல்வியில் எளிதாக வெற்றி கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 4                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |