Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! உதவிகள் கிடைக்கும்….! அலைச்சல் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வாக்கு வன்மையால் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும்.

இன்றைய நாள் கொஞ்சம் சுமாராக இருக்கும். சோதனைகளை எல்லாம் நீங்கள் தான் சாதனைகளாக மாற்ற வேண்டும். வியாபாரம் ரீதியாக கடினமான உழைப்பு தேவைப்படும். எல்லாவிதமான முயற்சிகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புது முயற்சிகள் வேண்டாம். காரியத்தடை, தாமதம் இருக்கும். வீண் அலைச்சல் இருக்கும். புத்தி சாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

வாக்கு வன்மையால் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும். கடன் வாங்க வேண்டாம். பெண்களுக்கு சின்ன சின்ன விஷயத்துக்கு கோபங்கள் வரும். பெண்கள் சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படுவீர்கள். சோம்பேறித்தனமாக இருப்பீர்கள். காதல் விவகாரங்கள் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். புரிந்துகொண்டுதான் செயல்பட வேண்டும். அப்போதுதான் காதலில் வெற்றி பெற முடியும். காதலில் முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |