Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பண வரவு இருக்கும்….! கவனம் தேவை….!!

மகரம் ராசி அன்பர்களே.!

பண வரவு கண்டிப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் கருதி எடுக்கக்கூடிய முடிவுகள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டிய சூழல் இருக்கின்றது. எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் அதனை திட்டமிட்டு நீங்கள் செலவு செய்ய வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவது போல் நடந்து கொள்ள வேண்டும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வந்துவிடும். குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். பிரச்சனைகளும் சரியாகிவிடும். பயணங்களின்போது கவனம் தேவை. பயணத்தை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது வாகனத்தை இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை மூத்த சகோதரருடைய உடல் நிலையில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் சில நேரங்களில் மன வருத்தத்தை கொடுக்கும். காதலில் உள்ள பிரச்சினைகள் ஓரளவு சரியானாலும் பழைய நினைவுகளால் மனவருத்தங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாளில் தைரியம் கூடும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்து வந்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |