மகரம் ராசி அன்பர்களே.! செல்வம் சேரும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். எதிர்பார்த்த தகவல்கள் கொஞ்சம் தாமதமாகத்தான் வரும். செல்வம் சேரும். செல்வாக்கு கூடும். கடனில் ஒரு பகுதி அடையக் கூடும். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். தெளிவான சிந்தனை இருக்கும். அழகான கண் பார்வை இருக்கும். வசீகரமான தோற்றமும் இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். காதல் சந்தோஷத்தை ஏற்படுத்திவிடும். கணவன் மனைவி உறவு பலப்படும்.
திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு இல்லத்தில் மழலை செல்வம் கிடைக்க கூடிய அம்சம் இருக்கின்றது. இன்று மாணவர்களுக்கு தைரியம் இருக்கும். தைரியத்துடன் எதையும் செய்ய முடியும். கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். இன்று மாணவர்களுக்கு சிந்தனை திறன் அதிகமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் செய்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் வெள்ளை