மகரம் ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் சரியாகும்.
இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எந்த காரியத்தில் இறங்கினாலும் அந்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சில முயற்சிகள் செய்வீர்கள். ஆனால் அதனை தடுப்பதற்கு சில நபர்கள் ஈடுபடுவார்கள். சில தடைகளை உடைத்தெறிந்து தான் எதிலும் நீங்கள் முன்னேற வேண்டியிருக்கும். மனைவியிடம் கோபம் கொள்ள வேண்டாம். வாக்குவாதங்களால் மனநிம்மதி இல்லாமல் போகும். மற்றவரிடம் பகை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். திட்டங்களை முன் கூட்டியே யாரிடமும் சொல்ல வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் வேண்டும். பணவரவு தாமதமாக கையில் வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்கள் மூலம் முன்னேற்றமும் ஏற்படும்.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றது. நிர்வாகத்திறமை சிறப்பாக இருக்கும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். காதல் கசக்கும். காதலில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நன்மை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சாதிக்க முடியும். தடைகளை உடைத்தெறிந்து கல்வியில் ஜெயிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை