மகரம் ராசி அன்பர்களே.! முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.
இன்று கனிவாக பேசிதான் எதையும் சாதித்துக் கொள்ள வேண்டும். எல்லா காரியங்களும் உங்களுக்கு அனுகூலமாக முடியுமா என்றால் கஷ்டம்தான். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் யோசித்துதான் செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்கக்கூடாது. காரியங்களில் அலட்சியம் காட்டக்கூடாது. எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முன்கோபங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனக் குழப்பங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில காரியங்களில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசனை பண்ணி முடிவெடுப்பது எல்லா விதமான பிரச்சனைக்கும் தீர்வுக்கு வரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் கூடினாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
பழைய பாக்கிகளை வசூல் செய்ய வேண்டும். தீவிர முயற்சி நல்ல பலனை கொடுக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பாக பேசுவீர்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். காதல் கண்டிப்பாக கசக்கும். காதல் வேண்டுமா வேண்டாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். காதலை நினைத்து நீங்கள் மன வருத்தம் கொள்வீர்கள். கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் சிறு முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் பொறுமையாக இருந்தால் எல்லா விதமான பிரச்சனையும் தீரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்